இந்தியாவில் சீன ஆக்கிரமிப்பு காங்கிரஸ் ஆட்சியில் நடந்தது: ஒன்றிய அரசு விளக்கம்..!

டெல்லி: இந்தியாவின் கிழக்கு லடாக் பகுதியில் சீனா பாலம் கட்டி வரும் பகுதி 60 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் அந்த நாட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்று பாரதிய ஜனதா தலைமையிலான ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரியில் மிகப்பெரிய அளவில் ஏற்கனவே சீனா ஒரு பாலத்தை கட்டி முடிந்துவிட்டது. தற்போது அதே இடத்தில் இரண்டாவது பாலத்தையும் கட்டி எழுப்பி வருகிறது. இது புதிய பாலமா? அல்லது முதல் பாலத்தின் விரிவாக்கமா? இன்னும் தெளிவாகவில்லை. அதே நேரம் சீனா பாலம் கட்டி வரும் பகுதி இந்தியாவுக்கு சொந்தமான பகுதிதான் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சீனா ஆக்கிரமித்து பாலம் கட்டியுள்ள பகுதி, கடந்த பி 1960ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஆக்கிரமிக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார். காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள், இந்தியாவின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பிற நாடுகள் மதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த ஆக்கிரமிப்பு என்ற விளக்கத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: