இலங்கையை கொடிய உணவு பஞ்சம் தாக்குவது உறுதி... மக்கள் சிறு தானியங்களை உடனே பயிரிட வேண்டும் : பிரதமர் ரணில் உத்தரவு!!

கொழும்பு : இலங்கை திவாலாகிவிட்டதாக அந்த நாட்டின் மத்திய வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் வேறு எந்த நாட்டிடமோ உலக நிதி அமைப்புகளிடமோ கடன் வாங்க முடியாத சிக்கலான நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. இலங்கையின் கழுத்தை நெறித்து வரும் பொருளாதார நெருக்கடியால் அந்த நாடு கடனிலும் விலைவாசி உயர்விலும் பற்றாக்குறையிலும் அல்லல்லாடி வருகிறது. இந்த நிலையில் முதன்முறையாக 606 கோடி ரூபாய் கடன் தவணையை கட்ட இலங்கை தவறி உள்ளது. கடன் தொகையை செலுத்துவதற்கான சலுகை காலமான ஒரு மாத காலமும் முடிந்துள்ளதால் பொருளாதாரத்தில் இலங்கை திவாலாகிவிட்டதாக நேற்று முன்தினம் அந்த நாட்டு மத்திய வங்கி ஆளுநர் அறிவித்தார். இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் இலங்கை தங்கள் செல்வாக்கை இழக்கத் தொடங்கிவிட்டது.

இதன் மூலம் சர்வதேச கடன் சந்தையில் இனி கடன் வாங்குவதை இலங்கைக்கு குதிரைக் கொம்பாக இருக்கும். இதனிடையே இலங்கையில் உணவு பற்றாக்குறை நிலவ தொடங்கி இருப்பதால் விரைவில் பெரிய அளவிலான உணவு பஞ்சம் நிலவும் என்று அஞ்சப்படுகிறது. பஞ்சத்தில் இருந்து தற்காத்து கொள்ள இலங்கை மக்கள் சிறு தானியங்களை உடனே பயிரிட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே கேட்டுக் கொண்டுள்ளார். உலகில் இந்த ஆண்டிலேயே உணவில்லாமல் பஞ்சத்தில் அடிபடும் நாடுகளில் இலங்கையில் இருக்கும் என்று பிரதமர் ரணில் அறிவித்துள்ளார். அந்த பட்டியலில் ஆப்கானும் அடங்கும் என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரித்துள்ளது.

Related Stories: