தென்மேற்கு பருவமழையால் விபத்துகளை தவிர்க்க மின் கம்பங்களை ஒட்டியுள்ள மரக்கிளைகளை வெட்டும் பணி தீவிரம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே கோடை மழை பெய்து வருகிறது. இதனால், அவ்வப்போது மரக்கிளைகள் மின்கம்பங்கள் மீது முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டு, மின் விநியோகம் தடை பெற்று வருகிறது. இதில், தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் மின் கம்பிகளில் உரசும் நிலையில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 இதையடுத்து, மின்வாரிய அதிகாரிகள் சார்பில் மின் கம்பங்களை ஒட்டியுள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலகம் அருகே உள்ள மின் கம்பத்தை ஒட்டி இருந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து, நகர் மற்றும் கிராமப்பகுதிகளில் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மரக்கிளைகள் அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: