சென்னை : தமிழகத்தில் ஓமிக்ரான் BA 4 கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,சென்னையை அடுத்த நாவலூரில் உள்ள ஒருவருக்கு ஓமிக்ரான் BA 4 வகை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.ஓமிக்ரான் BA 4 வகை தொற்றால் பாதிக்கப்பட்டவர் நலமுடன் உள்ளார். தாயாருக்கும் அவரது மகளுக்கும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு உறுதியாகி இருந்தது.தாய்க்கும் மகளுக்கும் நடைபெற்ற பரிசோதனையில் உருமாறிய ஓமிக்ரான் வகை தொற்று பாதிப்பு உறுதியானது.
தாயாருக்கு ஓமிக்ரான் BA 2, மகளுக்கு ஓமிக்ரான் BA 4 தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. BA 4 வகை கண்டறியப்பட்ட நபர் குணமடைந்துவிட்டார். அவருடன் தொடர்பில் இருந்த யாருக்கும் தொற்று இல்லை. தமிழ்நாட்டில் கொரோனா, ஓமிக்ரான் உள்ளிட்ட 4 வகையான பெருந்தொற்று பாதிப்பு மட்டுமே உள்ளது. புதிய வகை கொரோனா பரவும் தன்மையில் இல்லை. ஆப்ரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட BA 4 கொரோனா தமிழகத்திலும் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மற்ற மாநிலங்களில் ஓமிக்ரான் BA 4 வகை பரவி இருக்கிறதா என்பதை மத்திய அரசு தெளிவுப்படுத்தும். சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனை கட்டிடத்தில் சில இடங்களில் சுவர்கள் பெயர்ந்து வருகின்றன.