சாலை தடுப்பில் பைக் மோதி மகன் பலி; தந்தை படுகாயம்

சென்னை: திருவொற்றியூர் சரஸ்வதி நகர் 12வது  தெருவை சேர்ந்த அர்ஜூன், அதே பகுதியில் உள்ள டயர்  தொழிற்சாலையில் இரவில் வேலை பார்த்து வருகிறார். பகலில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு காலையில் வீட்டிற்கு  வந்த அர்ஜூன், தனது மகன் புகழ் குமரனை (6)  அழைத்துக் கொண்டு, உணவு டெலிவரி செய்தார்.

இவர்கள், மணலி விரைவு சாலையில் சென்றபோது, அர்ஜூன் தூக்க கலக்கத்தில் இருந்ததால் தடுமாறி  சாலை தடுப்பில் பைக் மோதியது. இதில் அவரது மகன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அர்ஜூன்  பலத்த காயங்களுடன் திருவொற்றியூர் தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார். 

Related Stories: