சிறைவாசிகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தேன்:பேரறிவாளன் பேட்டி

சேலம், மே 21: சேலத்தில் பட சூட்டிங்கிற்காக தங்கியுள்ள திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவை நேற்று மாலை, பேரறிவாளன் மற்றும் அவரது தாய் அற்புதம்மாள் ஆகியோர் நேரில் சந்தித்தனர். அப்போது, இருவரும் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.பின்னர், அற்புதம்மாள் நிருபர்களிடம் கூறுகையில், பேரறிவாளனுக்கு ஏற்ற பெண் கிடைத்தால், உடனே திருமணம் செய்ய தயாராக இருக்கிறோம் என்றார்.

பேரறிவாளன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘19 வயதில் சிறைக்கு சென்ற நான், 31  ஆண்டு கழித்து தற்போது வெளி உலகை காண்கிறேன். இது புது உலகமாக தெரிகிறது. சிறையில் எனக்கு எந்தவித டார்ச்சரும் நடக்கவில்லை. நான் சிறை பள்ளிக்கூடத்தில் படித்தேன். பிறகு சிறைவாசிகளுக்கு பாடம் கற்பித்துக் கொடுத்தேன்’’ என்றார்.

Related Stories: