கூடலூர் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் காட்டு யானை பலி

கூடலூர், மே 21:நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உட்பிரயர் தனியார் தேயிலை தோட்டம் உள்ளது. இங்கு உள்ள முருகன் கோயில் பகுதிக்கு நேற்று அதிகாலை 5 யானைகள் கொண்ட கூட்டம் ஒன்று அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து தேயிலைத் தோட்டம் வழியாக வந்துள்ளன. இதில் ஒரு யானை அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்புகள் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் மின் கம்பியை துதிக்கையால் இழுத்துள்ளது. இதனால் யானை மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

Related Stories: