தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் 90 அணைகளின் நீர்மட்டம் 146 டிஎம்சியாக உயர்வு: நீர்வளத்துறை அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில், மாநிலம் முழுவதும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அணைகளின் நீர்மட்டம் சரிய தொடங்கியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்து வருவதால், அணைகளின் நீர்மட்டம் வேகமாக  அதிகரித்து வருகிறது. குறிப்பாக, 93 டிஎம்சி (120 அடி) கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணை 82 டிஎம்சியாகவும் (112 அடி), 32 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் 16.5 டிஎம்சியாகவும்,

4 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அமராவதி அணையில் 1.5 டிஎம்சியாகவும், 10 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பெரியாறு அணையில் 4.8 டிஎம்சியாகவும், 6.09 டிஎம்சி கொள்ளளவு கொண்ட வைகை அணையில் 5.1 டிஎம்சியாகவும், 5.5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 1.2 டிஎம்சியாகவும், 5.5 டிஎம்சி கொாள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 2.4 டிஎம்சியும் நீர் இருப்பு உள்ளது. இதுபோல, 4.3 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் 3.8 டிஎம்சியும், 2.8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 0.831 டிஎம்சியாகவும்,

1.66 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணகிரி அணையில் 1.4 டிஎம்சி ஆகவும், 7.32 டிஎம்சி கொள்ளளவு கொண்ட சாத்தனூர் அணையில் 1.36 டிஎம்சியாகவும், 5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையில் 0.4 டிஎம்சியாகவும், 13.4 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பரம்பிகுளம் அணையில் 7.5 டிஎம்சியாகவும், 3.86 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணையில் 1.91 டிஎம்சியாகவும், 1.74 டிஎம்சி கொள்ளளவு கொண்ட திருமூர்த்தி அணையில் 0.69 டிஎம்சி என மொத்தம் 224 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 90 அணைகளில் 146 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் என்பதால் அணைகளின் நீர்மட்டம் மேலும் உயரும் என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: