சிக்கன நடவடிக்கை தேர்தல் ஆணையர்கள் சலுகைகளை துறந்தனர்

புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஆகியோர் சிக்கன நடவடிக்கையாக தங்களின் சலுகைகளை விட்டு கொடுத்துள்ளனர். இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக பதவி வகித்து வந்த சுசில் சந்திராவின் பதவிக் காலம் கடந்த 14ம் தேதி முடிந்தது. இதையடுத்து, புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் கடந்த 15ம் தேதி பொறுப்பேற்றார்.  தலைமைத் தேர்தல் ஆணையர், 2 தேர்தல் ஆணையர்களுக்கு, தேர்தல் ஆணையம் சட்டம்- 1991 பிரிவு 3ன் படி, ஊதிய சலுகைகள், வருமான வரி விலக்கு, இதர சலுகைகள் பெறுகின்றனர். இது தவிர, மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.34 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் ஏசி.பாண்டேவுடன் சேர்ந்து, தேர்தல் ஆணையத்தின் முதல் கூட்டத்தை நேற்று கூட்டினார். அப்போது, சிக்கன நடவடிக்கையாக அரசு தங்களுக்கு அளித்து வரும் கூடுதல் சலுகைகளை விட்டு கொடுப்பதாக இருவரும் தெரிவித்தனர். மேலும், வருடத்துக்கு 3 முறை வழங்கப்படும் பயண சலுகைகளில் இரண்டையும் விட்டு கொடுத்துள்ளனர்.

Related Stories: