ரிப்பன் மாளிகையில் இடமாற்றம் செய்ய இருந்த காந்தி சிலை மெரினாவிலேயே வேறு இடத்தில் வைக்க முடிவு

சென்னை: சென்னை கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி இடையே புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையம், காந்தி சிலை பின்புறம் சுரங்கத்தில் அமைக்கப்படுகிறது. மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் போது பழமையான கட்டிடங்கள், கோயில்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் நிறைவேற்ற வேண்டும். பழமையான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளம் உள்ளிட்ட 7 கோயில்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பழமையான கட்டிடங்கள், கோயில்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்நிலையில், மெட்ரோ ரயில் பணியின் போது காந்தி சிலைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தமிழக அரசு முன்னெச்சரிகை நடவடிக்கை எடுத்துள்ளது. மெட்ரோ ரயில் பணிகளால், காந்தி சிலை சேதமடைவதைத் தடுக்க, மெரினா காந்தி சிலையை இடமாற்றம் செய்து, ரிப்பன் மாளிகையில் வைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்திருந்த நிலையில், கடற்கரையிலேயே வேறு இடத்தில் சிலையை வைக்க இப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடற்கரையின் அடையாளமாக காந்தி சிலை இருந்து வருகிறது. ரிப்பன் மாளிகைக்கு சிலையை இடமாற்றம் செய்தால், இந்த நிகழ்ச்சிகளை நடத்த முடியாத நிலை ஏற்படும். எனவே மெரினா கடற்கரை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையிலேயே ஓர் இடம் கண்டறிந்து அங்கு சிலையை வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: