தேசிய பாதுகாப்பிலும், ஒருமைப்பாட்டிலும் பேச்சுவார்த்தை என்பதற்கு இடமே இல்லை. பிரதமர் மோடி நாட்டை பாதுகாக்க வேண்டும். :- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
சில நாட்களாக, மொழி அடிப்படையில் சர்ச்சைகளை கிளப்ப முயற்சிகள் நடப்பதை பார்க்கிறோம். ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம்தான். :- பிரதமர் மோடி
பாஜ ஆட்சி பொறுப்புக்கு வந்த நாள் முதல், உண்மையான வரலாறுகளை மறைத்து, மதவெறி பார்வையில் திரித்து எழுதும் முயற்சிகளை செய்து வருகிறது. :- மதிமுக பொதுச்செயலாளர் வைகோஎன்எல்சி நிலம் குறித்த விவகாரத்தில் தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம்தான் நிற்க வேண்டுமே தவிர, நிலங்களை பறிக்க முயலும் என்எல்சி பக்கம் நிற்க கூடாது.: - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி