திறந்தவெளி பல்கலைக் கழகங்களுக்கு சலுகை

புதுடெல்லி: நாட்டில் திறந்தவெளி பல்கலைக் கழகம் அமைக்க தேவையான இடத்தின் அளவு 60 ஏக்கரில் இருந்து 5 ஏக்கராக குறைக்கப்பட்டுள்ளதாக யுஜிசி தலைவர் தெரிவித்தார். இது குறித்து பல்கலை மானிய குழு தலைவர் ஜெகதீஷ் குமார் நேற்று அளித்த பேட்டியில், ``தொலைதூர கல்வி, ஆன்லைன் வழி கல்வி முறையை ஊக்குவிப்பதற்காகவே, திறந்தவெளி பல்கலைக் கழகம் அமைப்பதற்கான இடம் 5 ஏக்கராக குறைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, திறந்தவெளி பல்கலைக் கழகங்கள் அமைப்பதற்கு தேவைப்படும் நிலத்தின் அளவு முதலில் 40 முதல் 60 ஏக்கர் வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நகரங்கள், மலைப்பகுதிகளில் 40 முதல் 60 ஏக்கர் நிலம் கிடைப்பது மிகவும் கடினமாகி விட்டது. எனவே, அதன் தற்போதைய அளவு 5 ஏக்கராக குறைக்கப்பட்டுள்ளது,’’ என்று தெரிவித்தார்.

Related Stories: