காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை!: ஒகேனக்கல் காவிரி அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை..!!

தருமபுரி: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் ஒகேனக்கலுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கலுக்கு ஒரே இரவில் வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வரத்து உயர்ந்துள்ளது. இதனால் மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயின் அருவி செல்லும் நடைபாதையை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் நலன் கருதி 3வது நாளாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

அணைக்கு வினாடிக்கு 29,964 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகின்றது. இதனால் ஒரேநாளில் அணையின் நீர்மட்டம் 1.67 அடியாக உயர்ந்துள்ளது. பருவமழைக்கு முன்பாகவே அணையின் நீர்மட்டம் வேகமாக உயர தொடங்கியது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: