ஸ்ரீபெரும்புதூர் அருகே கார் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஒரகடம் சிப்காட் பகுதியில் கார் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் சிப்காட் பகுதியில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 120-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கில் திடீரென தீப்பிடித்துள்ளது. தீ மளமளவென பரவி, பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனை கண்டா ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு வீரர்கள், 2 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காணப்பட்டது.      

Related Stories: