கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இடங்களில் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும்-ஆட்சியர் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், கோட்டாட்சியர் யோகஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டம் எறையூர் ஜெபமாலைமாதா கோவில் தேர்பவனி திருவிழா நடைபெறுவது குறித்தும், திருவிழாவில் பாதுகாப்பு பணி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு நடத்திட அறிவுறுத்தப்பட்டது. மேலும் தற்போது மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் திருவிழாக்களில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படாதவாறு கண்காணித்து பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து விபத்து ஏற்படும் இடங்களை ஹாட்ஸ்பாட் கண்டறிந்து தகுந்த முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளவும், விபத்தை தவிர்க்கும் பொருட்டு சாலை பாதுகாப்பு குறித்த விதிமுறைகளை பின்பற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு தகுந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்திட வேண்டும், இவ்வாறு பேசினார்.  

Related Stories: