×

கொள்ளிடம் அருகே விவசாயிகளுக்கு காய்கறி பயிரில் பண்ணை பள்ளி பயிற்சி

கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே திருமயிலாடி கிராமத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் காய்கறி சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பண்ணைப் பள்ளி பயிற்சி நேற்று நடைபெற்றது. கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குனர் எழில்ராஜா தலைமை வகித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் அரவிந்தன் வரவேற்றார்.மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர் கலந்து கொண்டு தொழில்நுட்பம் மற்றும் திட்ட விளக்க உரையாற்றினார். கொள்ளிடம் தோட்டக்கலை அலுவலர் சுகன்யா,காய்கறி சாகுபடி முக்கியத்துவம் என்ற தலைப்பில் பேசினார்.

பண்ணை பள்ளியின் தொழில்நுட்ப பயிற்றுனர் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் தோட்டக்கலை துறை இணைப் பேராசிரியர் பத்மநாபன்,உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர் பாஸ்கர், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி அளித்தனர். பயிற்சியில் கொள்ளிடம் வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்ட 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முடிவில் ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் நன்றி கூறினார்.

Tags : Kollidam: Vegetable cultivation in Thirumayiladi village near Kollidam in Mayiladuthurai district under the Adma scheme of the Department of Agriculture.
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்