×

மானூர் அருகே பண்ணையில் புகுந்து வெறிநாய் கடித்ததில் 34 ஆடுகள் பலி

மானூர் : மானூர் அருகே நள்ளிரவில் பண்ணையில் புகுந்த வெறிநாய் கூட்டம் கடித்து குதறியதில் 34 ஆடுகள் பலியானது. மானூர் அருகே அழகியபாண்டியபுரம் சுப்பையாபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (41). விவசாயியான இவர், ஊருக்கு தெற்கே உள்ள கோழிப்பண்ணையை குத்தகைக்கு எடுத்து ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 50க்கும் மேற்பட்ட ஆடுகள், 10 குட்டி ஆடுகள் மற்றும் கோழிகள் பண்ணையில் இருந்தன. நள்ளிரவில் பண்ணைக்குள் புகுந்த வெறிநாய் கூட்டம், அங்கிருந்த ஆடுகளை கடித்து குதறியது. இதில் 34 ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தன.

நேற்று காலை பண்ணைக்கு வந்த மாரியப்பன், ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர், மானூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். நாய்களால் கடித்து குதறப்பட்ட ஆடுகளின் மதிப்பு ரூ.3.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. வெறிநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Manur , Manor: At least 34 goats were killed when a rabies herd bitten a farm near Manor at midnight. Alagiyapandiyapuram near Manor
× RELATED பைக் ஓட்டியதாக 18 வயதிற்குட்பட்ட 34 பேர்...