மதுரையில் கஞ்சா வியாபாரிகளின் ரூ.58 லட்சம் மதிப்புடைய சொத்துக்கள் முடக்கம்: மாவட்ட காவல்துறையினர் அதிரடி..!!

மதுரை: மதுரை மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகளின் 58 லட்சம் ரூபாய் மதிப்புடைய சொத்துக்கள் முடக்கப்பட்டிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் அல்லிகுண்டம் பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக பால முருகன் என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் தலைமறைவாக உள்ள காரைக்காளை என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் கஞ்சா வழக்கில் ஏற்கனவே சிறையில் உள்ள வனப்பேச்சி மற்றும் தேடப்படும் குற்றவாளியான காரைக்காளை ஆகியோருக்கு சொந்தமான 58 லட்சம் ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை காவல்துறை முடக்கியுள்ளது. மேலும் இதுபோன்ற சில வழக்குகளில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் எச்சரித்துள்ளார். கஞ்சா வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது இதுவரை கைது நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில், தற்போது சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Related Stories: