மேட்டுப்பாளையத்தில் இளம் பெண் மருத்துவர் தற்கொலை: தேர்வு அச்சமா?..குடும்ப பிரச்சனையா?..போலீசார் விசாரணை..!!

கோவை: மேட்டுப்பாளையத்தில் முதுகலை நீட் தேர்வுக்கு தயாராகி வந்த பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியை சேர்ந்த அபிஷேக் என்பவருக்கும், காட்டூரை  சேர்ந்த ராசி என்பவருக்கும் 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. கடந்த 2020ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து முடித்து டாக்டர் பட்டம் பெற்ற ராசி, முதுகலை நீட் தேர்வு எழுத தயாராகி வந்தார். இதற்காக மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கி படித்து வந்த ராசி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், அறை கதவை உடைத்து மருத்துவர் ராசியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான 6வது மாதத்தில் பெண் மருத்துவர் ராசி தற்கொலை செய்துகொண்டதால் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இளம் மருத்துவரின் தற்கொலைக்கு குடும்ப பிரச்னை காரணமா? அல்லது நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டதால் தேர்வு அச்சம் காரணமா? என்ற இருவேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: