ஜம்மு - காஷ்மீரில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் ஒரு பகுதி சரிந்து விழுந்து விபத்து... 10 தொழிலாளர்களின் கதி என்ன?

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதை ஒன்றில் இடிந்து விழுந்ததில் 10 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். காஷ்மீர் மாநிலம் ரம்பான் என்ற இடத்தில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் மெகர்கோட் என்ற கணவாய் பகுதியில் மலையை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அங்கு பெய்த தொடர் கனமழையால் நேற்று இரவு கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்த போது, திடீரென்று சுரங்கப்பாதையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது.

இதனால் அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ஜம்மு - தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த 2 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 10 தொழிலாளர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. காணாமல் போன தொழிலாளர்கள் ஜாதவ் ராய் (23), கௌதம் ராய் (22), சுதிர் ராய் (31), தீபக் ராய் (33), பரிமல் ராய் (38), ஷிவா சவுகான் (26), நவராஜ் சவுத்ரி (26), குஷி ராம் (25), முஜாபர் (38), இஸ்ரத் (30), விஷ்ணு கோலா (33), அமீன் (26). என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஐந்து பேர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள், இருவர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள், ஒருவர் அஸ்ஸாமைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ள இருவர் உள்ளூர்வாசிகள்.காணாமல் போனவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் தீயணைப்பு வீரர்களுடன் பேரிடர் மேலாண் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: