பாட்னா: ஊழல் வழக்கு தொடர்பாக பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். லாலு பிரசாத் யாதவ், அவரது மகன் மீது சமீபத்தில் தொடரப்பட்ட ஊழல் வழக்கு தொடர்பாக சோதனை நடத்தி வருகின்றனர். ராஷ்ட்ரிய ஜனதா தள நிறுவனரான லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகள் மிசா பாரதிக்கு தொடர்புடைய 15 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. லாலு பிரசாத் யாதவ் ரயில்வே துறை அமைச்சராக இருந்த போது நடைபெற்ற பணிகளுக்கான தேர்வில் வேலை வாங்கி தருவதாக கூறி முறைகேடு நடந்திருப்பதாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. ரயில்வே வேலைகளை வழங்குவதற்காக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் நிலம் மற்றும் சொத்துக்களை லஞ்சமாக பெற்றதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.