தனியார் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திருத்தணி: திருத்தணியில் புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தனியார் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக விழிப்புணர்வு பேரணி மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தளபதி கே விநாயகம் மகளிர் கலைக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் உலக புகையிலை ஒழிப்பு தினம் நடந்தது. இதில், கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் பேரணி திருத்தணி கமலா திரையரங்கம் அருகே நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் எஸ் பாலாஜி தலைமை வகித்தார். திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலை கொடியசைத்து பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார் . இதனை தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் திருத்தணி நகரம் முழுவதும் புகையிலை ஒழிப்பு குறித்து விளம்பர பதாகைகள் கையில் ஏந்தியும் புகையிலை பயன்படுத்தக்கூடாது என கோஷமிட்டனர். பின்னர்,  ஊர்வலமாக வந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  மேலும், துண்டு பிரசுரங்களையும் வழங்கி கலை நிகழ்ச்சி மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  இதில், கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், பள்ளி முதல்வர் விநாயகம், துணை முதல்வர் பொற்செல்வி, பள்ளி தலைமையாசிரியர் சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: