பேராயரிடம் ரூ.8.50 லட்சம் மோசடி பெண் மீது 5 பிரிவில் வழக்கு

சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தை  சேர்ந்த பேராயர் காட்ப்ரே நோபுள், பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், எனது மூத்த மகன் ஈப்ரீம் பிளசன் நோபுள் சீனாவில் படித்துள்ளார். இந்நிலையில் என்னை தொடர்பு கொண்ட சென்னையை சேர்ந்த மரிய செல்வம் (41), உங்கள் மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருகிறேன்,’ என்று கூறினார். இதற்காக என்னிடம் ரூ.8.50 லட்சம் கேட்டார். அதன்படி நான் அவரது வங்கி கணக்கில் பணத்தை அனுப்பினேன்.

இதற்கிடையே வேலைக்கு அனுப்புவதாக கூறிய நிறுவனத்தின் இணையதளத்தை பார்த்த போது, எங்கள் கம்பெனி பெயர் சொல்லி யாரேனும் பணம் கேட்டால் நம்பாதீர்கள் என்று எச்சரிப்பு செய்திருந்தது. உடனே மரிய செல்வம் அனுப்பிய அனைத்து ஆவணங்களையும் பரிசோதனை செய்த போது, அனைத்தும் போலியானது என தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் கேட்டதும், கொலை மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். அதன்பேரில், போலீசார், மரிய செல்வம் மீது ஐபிசி 468, 471, 420, 294(பி), 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: