மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு, பாமக ஆதரவு அளிக்கும் என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அதிமுக குழுவினர் கேட்டுக் கொண்டனர். அதிமுகவின் கோரிக்கை குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ராமதாஸ், நடத்திய கலந்தாய்வில், அதிமுக வேட்பாளர்களை ஆதரிப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

அதன்படி மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு பாமகஆதரவளிக்கும் என்பதை பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோரின் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என அறிக்கையில் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

Related Stories: