இன்று அனைத்து வருவாய் கோட்டங்களிலும் 25ம் தேதி கலெக்டர் அலுவலகத்திலும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 25 ம் தேதி மாவட்ட அளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக இன்று 20ம் தேதி காலை 10 மணியளவில் வருவாய் கோட்ட அளவில் திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையிலும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் அந்தந்த வருவாய் கோட்டங்களிலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்திலும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. வருவாய் கோட்ட அளவில் தீர்க்கப்பட இயலாத மனுக்கள் மட்டும் மாவட்ட கலெக்டர் தலைமையில் வருகின்ற 25 ம் தேதி நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என  கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: