ஜப்பானில் அடுத்த வாரம் குவாட் மாநாடு: அதிபர் பைடன் - மோடி சந்திப்பு

வாஷிங்டன்: இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பு அமைப்பே குவாட். குவாட் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேரடியாகப் பங்கேற்கும் 2வது மாநாடு மே 24ல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுகிறது. இதில், கலந்து கொள்ள ஜப்பான் செல்லும் அமெரிக்க அதிபர் பைடனும், இந்திய பிரதமர் மோடியும் அங்கு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில், இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு என்ற புதிய திட்டத்தை உறுப்பினர் நாடுகள் ஏற்படுத்த உள்ளன. மேலும், புதிய பொருளாதார சவால்களை எதிர்கொள்ள 21ம் நுற்றாண்டுக்கான பொருளாதாரத் திட்டமும் வடிவமைக்கப்பட உள்ளது. உக்ரைன் போர் உச்சமடைந்து வரும் நிலையில், ரஷ்யாவின் ஊடுருவல் மீதான இந்தியாவின் நிலைப்பாடு, கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதால், அமெரிக்காவில் அதன் விலை 6% உயர்ந்துள்ளதை தொடர்ந்து, கோதுமை ஏற்றுமதிக்கு அனுமதி ஆகியவை குறித்து அதிபர் பைடன் பிரதமர் மோடியுடன் கலந்து ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: