ஸ்டிராஸ்போர்க் சர்வதேச டென்னிஸ்: அரையிறுதியில் காயா யுவான்

பாரிஸ்: பிரான்சில் நடைபெறும் ஸ்டிராஸ்போர்க் சர்வதேச டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, ஸ்லோவேனியாவின் காயா யுவான் தகுதி பெற்றார். காலிறுதியில் பெல்ஜியம் வீராங்கனை எலிஸ் மெர்டென்சுடன் (26 வயது, 33வது ரேங்க்) நேற்று மோதிய காயா யுவான் (21 வயது, 81வது ரேங்க்) 7-6 (7-3), 6-4 என்ற நேர் செட்களில் 2 மணி நேரம் போராடி வென்றார். மற்றொரு காலிறுதியில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா (30 வயது, 8வது ரேங்க்) 6-4, 7-6 (8-6) என்ற நேர் செட்களில் பெல்ஜியத்தின் மரினா ஸானேவ்ஸ்காவை வீழ்த்தினார். அரையிறுதியில் பிளிஸ்கோவா - யுவான் மோதுகின்றனர்.

Related Stories: