ஞானவாபி மசூதி வழக்கில் உத்தரவு பிறப்பிக்க கூடாது: வாரணாசி நீதிமன்றத்துக்கு கட்டுப்பாடு

புதுடெல்லி: ஞானவாபி மசூதி விவகாரத்தை விசாரிக்க உள்ளதால், வாரணாசி நீதிமன்ற எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ள வாரணசி நீதிமன்றம் உத்தரவிட்டு, அதற்கான சிறப்பு குழுவை அமைத்தது. அதன்படி, விசாரணை குழு இன்று (நேற்று) தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. மேலும், ஆய்வின் போது சிவலிங்கம் கண்டுபிடிக்க பட்டதாக கூறப்படும் இடத்தை பாதுக்காக்கவும் வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இஸ்லாமியர்கள் 20 பேர் மட்டுமே தொழுகை நடத்த வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

 

இதையடுத்து, மேற்கண்ட கட்டுப்பாட்டுக்கு இஸ்லாமிய அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, எதிர்மனுதாரர் தரப்பில் வழக்கை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர்கள், ‘வாரணசி நீதிமன்றத்தில் மசூதியின் சுவர் தொடர்பான வழக்கு இன்று(நேற்று) விசாரணைக்கு வரவுள்ள நிலையில், இந்த வழக்கை ஒத்திவைத்தால், வாரணாசி நீதிமன்ற வழக்கையும் ஒத்திவைக்க வேண்டும்,’ என தெரிவித்தனர். இந்த கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை விசாரிக்க உள்ளதால், அதுவரை வாரணாசி நீதிமன்றமும் வழக்கை விசாரிக்கவோ அல்லது ஏதேனும் உத்தரவை பிறப்பிக்கவோ வேண்டாம்,’ என உத்தரவிட்டனர்.

மதுரா மசூதியை அகற்ற வழக்கு: உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாகி ஈத்கா மசூதி, கிருஷ்ணரின் பிறப்பிடமான கேசவ் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளது. எனவே, அங்கிருந்து மசூதியை அகற்ற வேண்டும் எனக் கோரி இந்துக்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று கொள்வதாக மதுரா நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, கிருஷ்ண ஜென்மபூமி விவகாரம் தொடர்பான பல வழக்கு விசாரணைகள், இந்த நீதிமன்றத்தில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: