சமாஜ்வாடி தலைவர் அசம் கானுக்கு ஜாமீன்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் அசம்கானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது அசம் கானுக்கு எதிராக ஊழல், முறைகேடு, கிரிமினல் குற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ்  81 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இவற்றில் பல வழக்குகளில் ஜாமீன் கோரி அசம் கான் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அசம்கானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இருப்பினும் அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை 2 வாரத்தில் நாடி முறையான ஜாமீனை பெற்றுக் கொள்ளவும் அசம் கானுக்கும் அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணைக்கு தடை கோரிய ஆசம் கானின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டனர்.

Related Stories: