சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ வழக்குகளுக்கான நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையில் காவலாளியாக பணிபுரியும் ரங்கநாதன், அவரது அலுவலக கட்டிடத்தில் இருந்த சிறுமியை கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை பார்த்த இளநீர் வியாபாரி அளித்த தகவலின் அடிப்படையில் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரங்கநாதனுக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை மாவட்ட போக்சோ வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.ராஜலட்சுமி அளித்த தீர்ப்பில், பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபணமாவதாக கூறி, ரங்கநாதனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: