இம்மாதத்தில் 2வது முறையாக சமையல் காஸ் விலை அதிகரிப்பு: சென்னையில் ரூ.1,018.50 ஆனது

சேலம்: இந்த மாதத்தில் 2வது முறையாக நேற்று வீட்டு உபயோக சமையல் காஸ் விலை திடீரென ரூ.3, வர்த்தக சிலிண்டர் விலை ரூ.8.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் (மே) 1ம் தேதி எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்த புதிய விலை பட்டியலில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர் விலையை மட்டும் ரூ.102.50 அதிகரித்தனர். அதனால், அதன் விலை சென்னையில் ரூ.2,508 ஆக அதிகரித்தது.

 இந்நிலையில் கடந்த 7ம் தேதி திடீரென வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை அதிரடியாக ரூ.50 அதிகரித்து அறிவித்தது. இதனால், நாடு முழுவதும் சிலிண்டர் விலை ரூ.1000ஐ தாண்டியது. சென்னையில் ரூ.1,015.50, சேலத்தில் ரூ.1,033.50 ஆக அதிகரித்தது. அப்போது, வர்த்தக சிலிண்டர் விலை ரூ.9.50 குறைக்கப்பட்டு, சென்னையில் ரூ.2,498.50 ஆகவும், சேலத்தில் ரூ.2,452 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.

இதனிடையே இம் மாதம் 2வது முறையாக நேற்று திடீரென வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் ரூ.3, வர்த்தக காஸ் விலை ரூ.8.50 அதிகரிக்கப்பட்டது. இதனால் வீட்டு உபயோக காஸ் விலை டெல்லியில் ரூ.1002.50, கொல்கத்தாவில் ரூ.1,029, மும்பையில் ரூ.1002.50, சென்னையில் ரூ.1018.50, சேலத்தில் ரூ.1036.50 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், வர்த்தக காஸ் விலை சென்னையில் ரூ.2,498.50ல் இருந்து ரூ.8.50 அதிகரித்து ரூ.2,507 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் ரூ.2,460.50 ஆக உயர்ந்துள்ளது. ஒரே மாதத்தில் 2வது முறையாக வீட்டு உபயோக சமையல் காஸ், வர்த்தக காஸ் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் ஏழை, நடுத்தர மக்கள், வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: