தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 42 பேர் பாதிப்பு; புதிய உயிரிழப்பு இல்லை; 41 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 42 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் இன்று புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 34 லட்சத்து 54 ஆயிரத்து 764 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதனால் இதுவரை மொத்தம் 38 ஆயிரத்து 025 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 322 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 41 பேர் ‘டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதுவரையில் 34 லட்சத்து 16 ஆயிரத்து 417 பேர் குணம் அடைந்து உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 23 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்கல்பட்டில் 5 பேருக்கும், திருவள்ளுரில் 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: