திருவெண்ணெய்நல்லூர் அருகே கூத்தாண்டவர் கோயில் தேர் திருவிழா

திருவெண்ணெய்நல்லூர்: விழுப்புரம்  மாவட்டம் திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள பெண்ணைவலம் கிராமத்தில் உள்ள  மிகவும் பழமை வாய்ந்த கூத்தாண்டவர் கோயிலில் கடந்த 10ம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் வைகாசி பெருவிழா தொடங்கியது.  ஒவ்வொரு நாளும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் சாமி வீதி உலா  நடைபெற்றது. நேற்று தினம் சுவாமிக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி  நடைபெற்றது.

நேற்று சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. அதன்  பின் தேர்திருவிழா நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களைச்  சேர்ந்த திரளானப் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர். அப்போது  பக்தர்கள் தங்கள் நிலத்tதில் விளைந்த தானியங்களையும், ரூபாய் நாணயங்களையும்  சுவாமிக்கு சூறை விட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதனைத்  தொடர்ந்து அழுகளம் நிகழ்ச்சியும், தீமிதி திருவிழாவும் நடைபெற்றது.

Related Stories: