இலங்கையில் தங்கி உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரக இணையதளத்தில் பதிவு செய்ய இந்திய வெளியுறவுத்துறை உத்தரவு

இலங்கை: இலங்கையில் தங்கி உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரக இணையதளத்தில் பதிவு செய்ய  இந்திய வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார சிக்கல் நீடித்து வரும் நிலையில் இந்திய வெளியுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்களும் பொதுமக்களும் தனித்தனி இணையதளத்தில் பதிவு செய்யுமாறு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் தகவல்களை பெறுவதற்கு +94-11-242260, +94-11-242860 என்ற தொலைபேசி என்னை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர்.

இலங்ககையில் கடும் பொருளாதார சிக்கல் நிலவி வருகிறது அதை தொடர்ந்து அரசியல் மாற்றங்களும் நடந்து வருகின்றது. பொருளாதார சிக்கலை தொடர்ந்து பொதுமக்கள் வன்முறையிலும் ஈடுபட்டு வருவதால் இந்திய வெளியுறவுதுறை உத்தரவு பிறப்பித்துள்ளது. எரிப்பொருட்களுக்கு தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு, உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு என்ற நிலையில் இலங்கை உள்ளது. கடும் பொருளாதார சிக்கலில் இலங்கை இருக்கும் நிலையில் இலங்கையில் தங்கி உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரக இணையதளத்தில் பதிவு செய்ய இந்திய வெளியுறவுதுறை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: