அரசு பள்ளிகளில் 2 மாதமாக சம்பளமின்றி தவிக்கும், 3,000 ஆசிரியர்கள் சம்பளம் பெறும் வகையில், புதிய அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு!!

சென்னை : தமிழகத்தில் 3,000 ஆசிரியர்களுக்கு மேலும் ஓர் ஆண்டு பணி நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி துறை சார்பில், விருப்ப இடமாறுதல், பணி நிரவலுக்கான இணைய கவுன்சிலிங், மூன்று மாதங்களுக்கு முன் நடத்தப்பட்டது. சில மாவட்ட பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை கமிஷனர் நந்தகுமார் உத்தரவுப்படி, அனுமதிக்கப்பட்ட இடங்களை விட, கூடுதல் ஆசிரியர்கள் இடம் மாற்றப்பட்டனர். இதன்படி, 3,000 ஆசிரியர்கள் கூடுதல் இடங்களில் பதவியேற்றனர்.

ஆனால் இவர்களுக்கு கடந்த மார்ச், மே என இரண்டு மாதங்களாக சம்பளம் நிறுத்தப்பட்டது. அரசாணை இல்லாமல், புதிய இடங்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என்று நிதித்துறை தெரிவித்திருந்தது.இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் 3000 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பிற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையை பள்ளிக்கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா நேற்று பிறப்பித்துள்ளார். மேலும், ஆசிரியர்களுக்கு ஊதியம் மற்றும் இதர படிகளை வழங்கிடவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: