ஜவுளி, பொறியியல், ஆட்டோ மொபைல் என அனைத்து தொழில்களுக்கும் சிறந்த நகரம் கோவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கோவை: ஜவுளி, பொறியியல், ஆட்டோ மொபைல் என அனைத்து தொழில்களுக்கும் சிறந்த நகரம் கோவை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவையில் தொழில்துறையினருடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது பேசிய அவர், கோவை மக்கள் தொடாத துறையும் இல்லை, அவர்கள் தொட்டும் துலங்காத துறையும் இல்லை என பாராட்டினார். கோவையில் உள்ள டைடல் பூங்காக்கள் மூலம் கோவை உலகளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது என தெரிவித்தார்.

Related Stories: