×

இந்தியாவில் ஒரே நாளில் 2,364 பேருக்கு கொரோனா..2,582 பேர் குணமடைந்தனர்..10 பேர் பலி!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 2,364 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,29,563ஆக உயர்ந்தது.

* புதிதாக 10 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,303 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,582 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,89,841ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.75% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆக குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.04% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 15,419 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

*இந்தியாவில்  1,91,79,96,905 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 13,71,603 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags : India , India, Corona
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!