ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

கூடுவாஞ்சேரி:செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி வல்லாஞ்சேரியில் உள்ள பெரிய ஏரி, காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் காரணைப்புதுச்சேரி பெரியஏரி, நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி நந்திவரம் பெரியஏரி, ஊரப்பாக்கம் ஊராட்சி கிளாம்பாக்கம் பெரிய ஏரி ஆகிய பகுதிகளில் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதிகளை கலெக்டர் ஏ.ஆர்.ராகுல்நாத் நேற்று  ஆய்வு செய்தார்.

அப்போது கலெக்டர் ராகுல்நாத் கூறுகையில், ‘வல்லாஞ்சேரியில் இருந்து நந்திவரம், காரணைப்புதுச்சேரி, ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், மண்ணிவாக்கம், வரதராஜபுரம் வழியாக அடையாறு ஆற்றுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய்களை தூர் வார வேண்டும். மழை காலங்களில் குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழாக வகையில் ஏரி, குளம், குட்டை ஆகிய நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். அவருடன் வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கட்ராகவன், சாய்கிருஷ்ணன் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: