பேரறிவாளன் கடந்து வந்த முட்பாதை...

மே 21, 1991: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புத்தூரில் 10:20க்கு  தாணு என்ற மனித வெடிகுண்டால் கொல்லப்படுகிறார். அவரோடு சேர்ந்து பதினாறு பேர் உடல் சிதறி இறக்கிறார்கள்.

மே 22, 1991 : வழக்கை சிபிசிஐடி விசாரிக்கத் தொடங்குகிறது.

மே 24, 1991: வழக்கு சிபிஐ-யின் சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்றப்படுகிறது.

ஜூன் 11, 1991: ராஜிவ் படுகொலை வழக்கில் தொடர்பிருப்பதாகக் கூறி பேரறிவாளன் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறார்.

மே  20, 1992: சிறப்புப் புலனாய்வுக் குழு, இந்த வழக்குடன் தொடர்புடையதாகக்கூறி 41 பேர் மேல் சென்னை தடா நீதி மன்றத்தில் குற்றப்பத்திரிகை பதிவு செய்கிறது. அதில், பனிரெண்டு பேர் ஏற்கெனவே இறந்துவிட்டார்கள், மூன்று பேர் தலைமறைவாக இருந்தார்கள்.

ஜனவரி 28, 1998: நீண்ட வழக்கு நடைமுறைகளுக்குப் பிறகு தடா கோர்ட் பேரரறிவாளன் உட்பட 26 பேருக்கு மரண தண்டனை அறிவிக்கிறது.

மே 11, 1999: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 9 பேர் விடுவிக்கப்பட்டனர். பேரறிவாளன், நளினி, முருகன்  மற்றும் சாந்தனுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. ரவிச்சந்திரன்,  ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை  ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

ஏப்ரல் 2000: நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

2001: சாந்தன், முருகன், பேரறிவாளன் மூவரும் தங்கள் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்தார்கள்.

2006: பேரறிவாளனின் சுயசரிதை வெளிவருகிறது. பேட்டரி வாங்கிக் கொடுத்ததை எப்படி நைச்சியமாக ஒரு மாபெரும் படுகொலைக் குற்றத்தோடு இணைத்து வழக்கில் சிக்க  வைக்கப்பட்டேன் என்று கூறியிருந்தார் பேரரறிவாளன்.

11, ஆகஸ்ட் 2011: ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் இவர்களின் கருணை மனுவை 11 ஆண்டுகள் கழித்து நிராகரிக்கிறார்.

ஆகஸ்ட்  2011: செப்டம்பர் 9ம் தேதி மூவருக்கும் தூக்கு தண்டனை  நிறைவேற்றப்படவுள்ளது என்ற நிலையில் சென்னை உயர்நீதி மன்றம் தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவிடுகிறது.

24 பிப்ரவரி  2013: நீதியரசர் கே.டி.தாமஸ் இந்த வழக்கில் ஒரு முக்கியமான கருத்தைத்  தெரிவிக்கிறார். இருபத்தி மூன்று வருடங்கள் சிறையில் வாடிய பிறகு இவர்களைத்  தூக்கில் இட்டால் ஒரே குற்றத்துக்காக இருமுறை தண்டிக்கப்பட்டதாக ஆகிவிடும் என்று கூறினார்.

நவம்பர் 2013: முன்னாள் சிபிஐ அதிகாரி  வி.தியாகராஜன், பேரறிவாளனை தடாவில் கைது செய்தது தொடர்பாக ஒரு முக்கியமான  விஷயத்தை வெளியிடுகிறார். ’பேரறிவாளன் பேட்டரி வாங்கிக் கொடுத்ததை  ஒப்புகொண்டாலும் அதனை ராஜிவ் படுகொலைக்குத்தான் வாங்கிக் கொடுத்தார் என்று  வாக்குமூலத்தில் சொல்லவில்லை’ என்றார்.  

21 ஜனவரி 2014: ராஜிவ்  கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட பனிரெண்டு பேருக்கான மரணதண்டனையை உச்ச  நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

2015: பேரறிவாளன்  தமிழ்நாடு கவர்னிடம் விடுதலை செய்யக்கோரி கருணை மனு அனுப்பினார். கவர்னர்  பதில் அளிக்காததால் உச்சநீதி மன்றத்தை நாடினார்.

ஆகஸ்ட் 2017: தமிழ்நாடு அரசு பேரறிவாளனுக்கு 26 ஆண்டுகளுக்குப் பிறகு பரோல் வழங்கியது.

6 செப்டம்பர் 2018: தமிழ்நாடு கவர்னருக்கு பேரறிவாளன் விடுதலை தொடர்பாக  முடிவெடுக்கும் அதிகாரம் உண்டென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஜனவரி 2021: பேரறிவாளனின் கருணை மனு மீது கவர்னர் முடிவெடுக்காமல் இருப்பதை உச்சநீதி மன்றம் கண்டிக்கவே கவர்னர் அதனை  ஜனாதிபதிக்குத் திருப்பி அனுப்பினார்.

மே 2021: திமுக தலைமையிலான அரசு அமைந்ததுமே பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டது. பரோல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.

9 மார்ச் 2022: உச்சநீதி மன்றம் பேரறிவாளனுக்கு பெயில் வழங்கி உத்தரவிட்டது.

11 மே 2022: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு.

18 மே 2022: உச்ச நீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு.

Related Stories: