பேரறிவாளன் விடுதலை சிறைத்துறை டிஜிபி அறிக்கை

சென்னை: பேரறிவாளன் விடுதலை தொடர்பாக சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய உச்சநீதிமன்றத்தின் வழக்கு சி.ஏ.எண் 833-834/ 2022 நாள் 18.05.2022, பேரறிவாளனுக்கு குற்ற எண். 329/1991-ல் வழங்கப்பட்ட தண்டனையினை அவர் முழுவதுமாக கழித்ததாக கருதி அவரை இந்திய அரசியல் சாசனம் பிரிவு 142-ன்படி விடுதலை செய்யவும், அவருக்கான பிணைப் பத்திரத்தினை ரத்து செய்யவும் ஆணையிட்டுள்ளது. இதன்படி பேரறிவாளனது பிணைப்பத்திரம் ரத்து செய்யப்பட்டு புழல் மத்திய சிறை-1 ன் தண்டனை பதிவேடுகளில் உரிய பதிவுகள் மேற்ெகாள்ளப்பட்டு 18.05.2022 அன்று விடுதலை செய்யப்பட்டார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories: