6 பேரும் விடுதலையாக வாய்ப்பு?

பேரறிவாளனுக்கு  விடுதலை வழங்கி உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் தொடர்ச்சியாக, முருகன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சாந்தன், ஜெயக்குமார் ஆகிய 6 பேருக்கும் விடுதலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இத் தீர்ப்பு அவர்களது வழக்கிலும் முன்மாதிரியாக சுட்டிக் காட்டப்படும். பேரறிவாளன், சிறையின் நன்னடத்தை விதிகளைப் பின்பற்றி நடந்தது தொடர்பான விஷயங்களும் அவரது விடுதலை விவகாரத்தில் கருத்தில் கொள்ளப்பட்டது. இதுபோல் மற்ற 6  பேரின் விடுதலை விஷயத்திலும் கருத்தில் கொள்ளப்படும் என தெரிகிறது. பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு  மற்றவர்களுக்கும் பொருந்தும் என தமிழக அரசின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். முருகன் உள்ளிட்டோர் இந்திய குடிமக்கள் இல்லை என்பதால், அவர்களுக்கு விடுதலை வழங்கப்படுவதில் சட்டச் சிக்கல் எழலாம் என்றும் கூறப்படுகிறது.

Related Stories: