நகர் ஊரமைப்பு பதவிக்கான எழுத்து தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: நகர் ஊரமைப்பு பதவிக்கான எழுத்துத் தேர்வு வருகிற 28ம் தேதி நடைபெறும் என அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழ்நாடு பொதுப் பணிகளில் அடங்கிய நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் பதவிக்கான எழுத்துத் தேர்வு வருகிற 28ம் தேதி முற்பகல், பிற்பகல் என இரண்டு வேளைகளில் சென்னை, மதுரை மற்றும் கோயம்பத்தூர் மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கூட நுழைவு  சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: