பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 26ம் தேதி இ. கம்யூ. போராட்டம்: தேசிய பொது செயலாளர் டி.ராஜா அறிவிப்பு

சென்னை: சென்னை தியாகராஜ நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில், தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா நேற்று நிருபர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:  பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. இந்த தீர்ப்பை அனைவரும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன். பேரறிவாளனை விடுதலை செய்ய அவரது தாய் அற்புதம் அம்மாள் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லை, அவரது கண்ணீர் வீண் போகவில்லை. அவரது போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு வரும் அக்டோபர் மாதம் 14 முதல் 18ம் தேதி வரை விஜயவாடாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும், வரும் 26ம் தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு பேசினார். மேலும், வரும் 26ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வர உள்ளார்.

Related Stories: