தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற பெண்ணை துன்புறுத்திய 3 பெண் காவலர்கள் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற பெண்ணை துன்புறுத்திய 3 பெண் காவலர்கள் உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே பிரபாகரன் என்பாரின் வீட்டில் கடந்த 4-ம் தேதி 10 சவரன் நகை மாயமானது, நகை மாயமானது குறித்து பக்கத்து விட்டு சண்முகம் என்பவரின் மனைவி சுமதி மீது சந்தேகம் இருப்பதாக பிரபாகரன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

புகாரை அடுத்த சுமதியை கடந்த 7-ம் தேதி காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பெண் காவலர்கள் மெர்சினா, கல்பனா, உமாமகேஸ்வரி ஆகியோர் சுமதியை விசாரணை செய்து முடித்து வீட்டுக்கு அனுப்பினார். விசாரணையின்போது காவலர்கள் துன்புறுத்தியதில் காயமடைந்த சுமதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.  

பெண் காவலர்கள் 3 பேர் மீது சுமதி கடந்த 11-ம் தேதி மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். மாவட்ட எஸ்.பி விசாரணையில் சுமதியை காவல்நிலையத்தில் வைத்து துன்புறுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண் காவலர்கள் 3 பேர் மற்றும் விசாரணை அதிகாரி முத்துமாலை ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உத்தரவிட்டனர். மேல் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்காத தனிப்பிரிவு காவலர் முருகனை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட எஸ்.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Related Stories: