×

பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் முதற்கட்டமாக ரூ.9 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு..!!

சென்னை: இலங்கைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதற்கட்டமாக ரூ.9 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.  இலங்கை வரலாற்றில் இல்லாத அளவுக்கு பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது.  இதனையடுத்து தமிழக பேரவையில் இலங்கை தமிழர்களுக்கு உதவிடும் வகையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்காக, ரூ.80 கோடியில் 40,000 டன் அரிசியும், ரூ.28 கோடி மதிப்பில் உயிர் காக்கக்கூடிய 137 மருந்துப் பொருட்களும், 15 கோடி ரூபாய் மதிப்பிலான குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால்பவுடரும் வழங்க தமிழக அரசு முனைப்புடன் இருப்பதாக பேரவையில் முதல்வர் அறிவித்தார்.

திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்கள் ஒரு மாத ஊதியத்தை இலங்கை மக்களுக்கு வழங்கினர்.  இதில் முதல்வர் மற்றும் எந்த தலைவர்களின் படமும் இடம் பெறவில்லை. ஒன்றிய மற்றும் மாநில அரசின் முத்திரை மட்டுமே இடம்பெற்றுள்ளது. மேலும் தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து அன்புடன் என்ற வாக்கியம் இடம்பெற்றுள்ளது. அதன் கீழ் மு.க.ஸ்டாலின், தமிழக முதலமைச்சர் என அச்சிடப்பட்டுள்ளது. இந்த பொருட்களை இலங்கை மக்களுக்கு அனுப்புவதற்காக அரிசி, பால் பவுடர், மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை பார்சல் செய்யும் தயார் செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன.

தற்போது, இலங்கைக்கு நிர்வாண பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்துள்ளார். 9500 டன் அரிசி, 30 டன் மருந்து பொருட்கள், 200 டன் பால் பவுடர் உள்ளிட்டவை முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டன. பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு தமிழகம் சார்பில் ரூ.80 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Government of Tamil Nadu ,Sri Lanka , Sri Lanka, Government of Tamil Nadu, relief items
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...