×

பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் முதன்முறையாக நாடாளுமன்றம் வந்தார் மகிந்த ராஜபக்சே

கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே இன்று பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை பொருளாதாரத்தை முறையாக வழிநடத்தத் தவறியதால், அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்யக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பிரதமராகப் பதவி வகித்து வந்த மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, மகிந்த ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களை தாக்கியதால், நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. பிரதமர் அதிகாரப்பூர்வ இல்லமான அலரி மாளிகைக்கு வெளியே போராட்டக்காரர்கள் குவிந்ததால், திரிகோணமலையில் உள்ள கடற்படை முகாமிற்கு பாதுகாப்புடன் மகிந்த ராஜபக்சே அழைத்துச் செல்லப்பட்டார்.

இருந்தும் திரிகோணமலையிலிருந்து மகிந்த ராஜபக்சே நேற்று வெளியேறியதாக தகவல் வெளியான நிலையில், நாட்டைவிட்டு தப்பிச் சென்றதாகவும், கொழும்புவில் பாதுகாப்பான இடத்திற்கு சென்றதாகவும் கூறப்பட்டன. இந்நிலையில், இன்று நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தில் மகிந்த ராஜபக்சே பங்கேற்றார். கடந்த 9ம் தேதி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பின்னர், முதன்முறையாக பொதுவெளியில் மகிந்த ராஜபக்சே வந்தார். பிரதமர் பதவியிலிருந்து விலகினாலும், அவரை கைது செய்யக் கோரி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் நாடாளுமன்றம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.



Tags : Mahinda Rajapaksa ,Parliament , rajabacha, parliment, resign
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...