ரயில்வேயில் போலி பணி நியமன ஆவணத்தை கொடுத்து ரூ.3 கோடி மோசடி செய்த நபரின் வீட்டின் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம்

தென்காசி: ரயில்வேயில் போலி பனி நியமன ஆவணத்தை கொடுத்து ரூ.3 கோடி மோசடி செய்த நபரின் வீட்டின் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே ராமநாதபுரத்தை சேர்ந்த இசக்கி முத்து என்பவரின் மகன் வள்ளிநாயகம் . ரயில்வே ஊழியர் என கூறி உள்ளூர் வாசிகளை நம்ப வைத்துள்ளார். தமது தோழி தமிழரசிக்கு ரயில்வே துறையில் வேல வாங்கி தந்ததாக கூறி மோசடி செய்துள்ளார். வள்ளிநாயகம் பேச்சை நம்பி 20 க்கு மேற்பட்டவர்கள் தலா 10 லட்சம் பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் வாசுதேவநல்லூர் போலீசார் வழுக்கு பதிவு செய்து வள்ளிநாயகம், தமிழரசி,  மகேந்திரகுமார், முருகன் ஆகிய 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் 6 மாதங்கள் ஆகியும் பணம் கிடைக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

கைது செய்யப்பட்ட மோசடி நபர்கள் 4 பேரும் 2 மாதத்திற்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தனர். ரூ.3 கோடி ஏமாற்றி விட்டு ஊருக்கு திரும்பியவர்களிடம் பணத்தை பெற்று தரவேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பிரச்சனையில்  காவல்துறையில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் புகார் அளித்துள்ளார்.

Related Stories: