கெலமங்கலத்தில் பட்டாளம்மன் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

ராயக்கோட்டை: கெலமங்கலத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பட்டாளம்மன கோயில் தேரோட்ட விழா கொரோனா பரவல் காரணமாக கடந்த 2ஆண்டுகளாக விழா நடைபெறவில்லை. தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், கடந்த 15ம் தேதி விழா தொடங்கியது. 11 கிராம மக்கள் சார்பில் நடந்த விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம், பக்தர்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று தேரோட்டம் நடந்தது.

இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட ராமச்சந்திரன் எம்எல்ஏ தேரோட்டத்தை துவக்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, வடம் பிடித்து தேரை இழுத்தனர். இதில் பேரூராட்சி தலைவர் தேவராஜ், விழா கமிட்டி தலைவர் சென்னபசப்பா மற்றும் விழா குழுவினர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நகாின் முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்தது. இந்நிகழ்ச்சியையொட்டி பாதுகாப்பிற்காக மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. ராயக்கோட்டை போலீஸ் எஸ்.ஐ.பார்த்திபன் தலைமையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் டூவீலர் மெக்கானிக்குகள் சங்கம் சார்பில் நடந்த அன்னதானத்தை எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இதில், சங்க தலைவர் சிவராஜ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: