நள்ளிரவில் மலர்ந்து அதிகாலையில் வாடும் நிஷாகந்தி: கூடலூரில் பூத்து குலுங்குகிறது

கூடலூர்:  கூடலூர் பகுதியில் நிஷாகந்தி மலர் செடிகளை  பொதுமக்கள் தங்களது வீடுகளில் வளர்த்து வருகின்றனர். அந்த செடிகளிலிருந்து வருடத்திற்கு ஒருமுறை பூக்கக்கூடிய நிஷாகந்தி பூக்கள் தற்போது பூக்கத் துவங்கியுள்ளன. தாமரையின் அளவை விட  பெரிதான இந்த பூக்கள் இரவு 8 மணிக்கு மேல் மொட்டுக்கள் மலரத் துவங்கி நள்ளிரவில் முழுமையாக மலர்ந்து  அதிகாலையில் வாடும் தன்மை உள்ளது. தற்போது இப்பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் பூக்கள் இரவில் பூத்து அப்பகுதிகளில் நறுமணம் வீசி வருகின்றன. சீனர்களின் அதிர்ஷ்ட பூவாக இது உள்ளதாகவும் பெரும்பான சீனர்களின்  வீடுகளிலும் இதனை வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சங்க காலத்தில் ஆழ்ந்த தவத்தில்  இருந்த முனிவர் ஒருவரின் தவத்தை கந்தர்வ அழகிகள் கலைக்க முற்பட்டதாகவும், கோபமடைந்த முனிவர் அந்த அழகிகளை பார்த்து நீங்கள் அனைவரும் நிஷாகந்தி பூவாக மாறி யாரும் பார்க்க முடியாத அளவில் இரவில் பூத்து காலையில் வாட வேண்டும் என சாபம் கொடுத்ததாகவும் கதைகள் கூறுகின்றன.கூடலூர் தோட்டமூலா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூத்துள்ள இந்த  நள்ளிரவில் பூக்கும்  அதிசய மலர்களை அக்கம் பக்கத்து மக்கள் மற்றும் சிறுவர்கள் பார்த்து புகைப்படங்கள் எடுத்து செல்கின்றனர்.

Related Stories: