நீடாமங்கலம் அருகே கோரையாற்றில் பாலம் கட்டும் பணி துவங்கி 3 ஆண்டாகியும் நிறைவடையவில்லை: விரைந்து முடிக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகில் கோரையாற்றில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பாலம் கட்டும் பணி 3 ஆண்டுகளாகியும் நிறைவடையவில்லை. விரைந்து முடிக்கப்படும என மக்கள்எதிர் பார்ப்பில் உள்ளனர்.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் அடிக்கடி போடப்படும் ரயில்வே கேட்டால் அதிக போக்கு வரத்து நெறிசல் ஏற்பட்டு வருகிறது.இதனால் வெளி மாநிலம்,மாவட்டம் மற்றும் அருகில் உள்ளவர்கள் நவகிரக கோயில்கள்,சுற்றுலா தலங்களுக்கு நீடாமங்கலம் வழியாக செல்லும் போது நெரிசலில் மாட்டி செல்லும் இடங்களுக்கு சரியான நேரத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனையறிந்த கடந்த அதிமுக ஆட்சி நடந்த போது போக்குவரத்து நெரிசலை ஓரளவு கட்டுப்படுத்த கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடி செல்லும் சாலை தட்டித்தெரு விலிருந்து நீடாமங்கலத்திலிருந்து ரிஷியூர் செல்லும் சாலை கொத்தமங்கலத்தை இணைத்து கோரையாற்றில் இணைப்பு பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

இந்த பாலம் கட்டும் பணி நிறைவடைந்தால் நீடாமங்கலத்தில் ஓரளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. ஏனென்றால் மன்னார்குடி பகுதியிலிருந்து வரும் பள்ளி வாகனங்கள்,ஆட்டோ,கார்,வேன் மற்றும் இரு சக்கர வாகனங்கள் கடை வீதி செல்லாமல் இந்த பாலம் வழியாக செல்லும் என்ற நோக்கில் இந்த பாலம் கட்டும் பணி அதிமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. ஆனால் பணிகள் தொடங்கி நடந்து நிறுத்தப்பட்டுள்ளது.பாலம் கட்டும் பணிக்கு சுமார் ரூ.2.5 கோடி ஒதுக்கீடு செய்ததாக கூறப்படுகிறது. இந்த பணி ஒரே ஆண்டில் முடிக்கப்பட வேண்டும். ஆனால் மூன்றாவது ஆண்டு தொடங்க உள்ளது.அடுத்த மாதம் மேட்டூர் அணையில் தண்ணீர் விவசாயத்திற்கு திறக்கப்பட உள்ள நிலையில் பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Related Stories: